நான் ஏன் வந்தேன் ?

Sunday, December 28, 2008
பதிவருங்க அல்லாரயும் பாத்ததுல மகிழ்ச்சி ! அல்லாரும் நல்லா பேசுனாங்கோ.கல்யாணத்துல ஆரம்பிச்சு அரசியல்ல முடிச்சது ரொம்பப் பொருத்தம்! ( ரெண்டுமே கூட்டணிதானே ) 
தேவையான செய்திகளும், தேனீரும் கிடச்சது. அடிக்கடி நடத்துங்க. 

ஒரு விண்ணப்பம் : லக்கிகிட்ட இருக்கிற ”அந்த ” இருபது புத்தகமும் வேணும். ( அவர் எழுதினத அப்பறமா வாங்கிக்கிறேன் ) அவர் தன்னோட பதிவில் வெளியிட்டாலும் உடனே படிப்பேன் என உறுதியளிக்கிறேன்.

முக்கியமா ஒரு சமாச்சாரம் : நண்பர் ஸ்ரீ பதிவில் உள்ள ஃபோட்டோ எல்லாமே நான் எடுத்தது. அதனால, எல்லா பாராட்டும் எனக்கே சொந்தம் ! 

வணக்கம்.
சேட்டை கோபி.

வணக்கம் வலையுலகமே ....

Friday, December 26, 2008அல்லாரும் நல்லாக்கிறீங்களா ? இனிமே எப்பிடி முடியும் ? எழுத வந்துட்டோம்ல ...
கல்லூரி மாணவன், இன்னும் காதலிக்காதவன். ( சேட்டயக் காதலிக்க எவளுக்குக் குடுத்து வச்சிருக்குன்னு தெரியல .....)

ஊருக்குள்ள நமக்கு ரொம்ப நல்ல பேரு ! அதனாலதான் இம்புட்டுத் தூரம் படிக்கப் பத்தி விட்டுட்டாய்ங்க...படிப்பு பார்ட் டைம் நமக்கு ! முழுக்கவனமும் சமுதாயத்தின் மேலதான் ..( நம்புங்க நீங்களாவது )

இனி எல்லா செய்தியும் நம்ம பார்வையில உங்கள வந்து சேரும்.. தாக்குதலுக்குத் தயாராகுங்க ...